Monday, January 19, 2026

அரசு பேருந்தில் சிலந்திக்கூடு., அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்து ஒன்றில் சிலந்திக்கூடு உள்ளதால் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

அறந்தாங்கி அரசு பேருந்து பணிமனைக்கு உட்பட்ட 8 ம் நம்பர் டவுன் பேருந்து அறந்தாங்கியில் இருந்து வைரிவயல்,வடுகாடு, மேலப்பட்டு, பெருங்காடு, மற்றும், நாகுடி, கண்டிச்சங்காடு வழியாக செல்லப்பன் கோட்டை செல்கிறது.

இப்பேருந்தில் சிலந்தி வலை பின்னி கூடு கட்டி உள்ளது. மேலும், பயணிகள் அமரும் இருக்கைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அச்சத்துடன் பயணிப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். எனவே, பழுதடைந்த பேருந்து சீரமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News

Latest News