காசா அமைதிக் குழுவிற்கு தலைமை வகிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், 60 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்.
அமெரிக்காவின் முயற்சியால் காசா – இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுவித்தது. அதற்குப் பதிலாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
இதுதொடர்பாக ஆலோசனை நடத்த ஒரு குழுவை அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அமைத்துள்ளார். இந்தக் குழுவில் இடம் பெற பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பிற்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார்.இந்நிலையில், காசா அமைதிக்கான குழுவில் இடம்பெறுமாறு இந்தியாவுக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
