ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு கூட இருக்கிறது.
இக்கூட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்க உள்ளார். அவரது உரையில் தமிழக அரசின் செயல்பாடுகள், கொள்கை, சாதனைகள் இடம்பெற்றிருக்கும். தமிழக அரசின் உரை ஆளுநர் அப்படியே வாசிப்பார் என சபாநாயகர் அப்பாவு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
