பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் கண்ணன், தற்கொலைக்கு முயன்றார்.
போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதாகி வானகரத்தில் உள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டு இருந்த அவர், வார்னிஷ் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
