ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், அரசியல் குழப்பம், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் அந்நாட்டில் நிலவி வருகிறது.
இதையடுத்து ஈரானுக்கு அரசுக்கு எதிராக பொதுமக்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஈரானில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், தற்போது ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்கள் கிடைக்கக்கூடிய போக்குவரத்து வழிகள் மூலம் ஈரானை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.
போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்குமாறும், ஈரானில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியத் தூதரகத்தின் அவசரத் தொடர்பு உதவி எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
அலைபேசி எண்கள்: +989128109115; +989128109109; +989128109102; +989932179359.
மின்னஞ்சல்: [email protected]
இணையதள முகவரி : https://www.meaers.com/request/home

