தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த ஜனநாயகன் திரைப்பட பேனர்களை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திரைப்பட நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திரைப்பட தணிக்கை குழு சான்றிதழ் வழங்காததால், படம் வெளியிடப்படவில்லை.
பொங்கலுக்கு படம் வெளியாகும் என்ற நம்பிக்கையில், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் திரையரங்குகள் மற்றும் பல பொது இடங்களில் பேனர்களை வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் திரையரங்குகள் உள்ளிட்ட பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த ஜனநாயகன் திரைப்பட பேனர்களை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
