அமெரிக்காவில் கடந்த 11-ம் தேதி கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஹாலிவுட் நடிகர் மார்க் ருப்பலோ பங்கேற்றார்.
அப்போது, விழாவில் பேசிய அவர், டொனால்ட் டிரம்ப் உலகின் மிக மோசமான மனிதர் என்றும், அவருக்கு உலகின் சக்திவாய்ந்த நாட்டின் அதிகாரத்தை ஒப்படைப்பது ஆபத்தானது என்றும் கூறினார். டிரம்ப் பாலியல் பலாத்காரக் குற்றவாளி மற்றும் தண்டனை பெற்றவர், வெனிசுலா மீதான போர் சட்டவிரோதம் என்றும் அவர் காட்டமாக விமர்சித்தார்.

வெனிசுலா மீதான அமெரிக்காவின் போர் நடவடிக்கை மற்றும் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக ‘நோ கிங்ஸ்’ இயக்கத்தின் மூலம் ருப்பலோ தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
