சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 21 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். மே மாதம் ரூ.10,000 வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த 12 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்கப்படுவதில்லை. மத்திய அரசின் நிதி வந்தால் ஆசிரியர்கள் கேட்காமலே செய்திருப்போம் என கூறினார்.
