சோமேட்டோவின் ஆன்லைன் மளிகை விநியோக நிறுவனமான பிளிங்கிட், தனது ‘10 நிமிடங்களில் டெலிவரி’ என்ற வியாபார வாக்குறுதியை தற்போது திரும்பப் பெற்றுள்ளது.
செப்டோ, பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட் போன்ற ஆன்லைன் மளிகை விநியோக செயலிகள், கடும் போட்டியின் காரணமாக வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில், மிகக் குறுகிய நேரத்தில் பொருட்களை விநியோகிக்கும் ‘10 நிமிட டெலிவரி’ உத்தியை பிளிங்கிட் அறிமுகப்படுத்தியது.
ஆனால், இந்த வாக்குறுதி ஊழியர்களை மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாக்குவதாகவும், அவர்கள் வேகமாகவும் ஆபத்தான முறையிலும் வாகனம் ஓட்ட வேண்டிய நிலை உருவாகுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு பாதிக்கப்படும் என்ற கவலை அதிகரித்தது.
இந்நிலையில், தொழிலாளர்களின் போராட்டங்களும் மத்திய அரசின் தலையீடும் காரணமாக, பிளிங்கிட் இந்த ‘10 நிமிட டெலிவரி’ வாக்குறுதியை கைவிட முடிவு செய்துள்ளது.
