Tuesday, January 13, 2026

3 பாம்புகளுடன் மருத்துவமனைக்கு வந்த நபர்., அலறிய ஊழியர்கள்

பீகாரில் பாம்பு கடிக்கு ஆளான பாம்பு பிடிவீரர், தன்னை கடித்த பாம்பு எதுவென தெரியாததால், 3 பாம்புகளை எடுத்து கொண்டு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பீகார் மாநிலம் ராஜ்பூரை சேர்ந்தவர் கவுதம் குமார். பாம்பு பிடி வீரரான இவர், ஒரு வீட்டில் இருந்த 3 நாக பாம்புகளை லாவகமாக பிடித்து காட்டில் விடுவதற்காக எடுத்து சென்றார். அப்போது 3 பாம்புகளில் ஒரு பாம்பு கவுதம் குமாரை கடித்துவிட்டது.

தன்னை கடித்தது எந்த பாம்பு என்று தெரியாததால் 3 பாம்புகளுடன் அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவர் சென்றார். 3 பாம்புகளுடன், கவுதம் குமார் சிகிச்சைக்கு வந்ததை கண்டு, அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து, கவுதம்குமாரின் உயிரை காப்பாற்றினர்.

Related News

Latest News