பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான படம் துரந்தர். இப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் வசூல் ரீதியாக பெரிய சாதனையை படைத்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி வெளியானதிலிருந்து ‘துரந்தர்’ திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்த நிலையில், ’துரந்தர்’ படம் வெளியான ஒரு மாதத்தில் உலகளவில் ரூ.1296 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. குறிப்பாக இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.1011.73 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே வேகத்தில் சென்றால், இப்படம் விரைவில் ரூ.2000 கோடி வசூலை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
