சென்னை அம்பத்தூரில் உள்ள உழைப்போர் உரிமை இயக்கம் அலுவலகத்தில் மூன்றாவது கட்டமாக உண்ணாவிரதம் இருந்து வரும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர் சேகர்பாபு சந்தித்தார். அப்போது தூய்மை பணியாளர்களின் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் அமைச்சர் சேகர் பாபு உறுதி அளித்தார்.
இதையடுத்து, சென்னை மாநகராட்சியின் 5வது மற்றும் 6வது மண்டல தூய்மை பணியாளர்கள் 57 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்து உண்ணாவிரதத்தை அமைச்சர் சேகர் பாபு முடித்து வைத்துள்ளார்.
பணி நிரந்தரம், 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட்ட ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக சேகர்பாபு உறுதி அளித்தார்.
