Monday, January 12, 2026

சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

தமிழகத்தில் இரண்டு அடுக்கு (டபுள் டக்கர்) பஸ் சேவை கடந்த 1970 ஆண்டு முதல் இருந்து வந்தது. இந்த சேவை 2007 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த சேவையை கொண்டு வர தமிழக அரசு ஆர்வம் காட்டியது.

இதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், முதல் கட்டமாக அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் இருந்து 20 பஸ்களை வாங்க திட்டமிட்டு அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை தொடங்கி இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related News

Latest News