பாமகவில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் தந்தை மகன் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் பாமகவில் இருந்து நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, மயிலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச சிவக்குமார், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.சதாசிவம், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.பி வெங்கடேஸ்வரன் ஆகிய மூவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் இன்று 12:01 2026 முதல் முழுமையாக நீக்கப்படுகிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சியினர் யாரும் மேற்கண்ட மூவரிடம் எந்தவித கட்சித் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
