த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபி.ஐ விசாரித்து வருகிறது.
கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜயை நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பியது. இதையடுத்து, சிபிஐ முன் ஆஜர் ஆவதற்காக விஜய் இன்று காலை 6 மண்யளவில் தனது பனையூர் வீட்டில் இருந்து டெல்லி புறப்பட்டார்.
இந்நிலையில், அவர் டெல்லி வந்தடைந்தார். சிபிஐ அலுவலகம் செல்லும் அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் அவரிடம் விசாரணை நடைபெற உள்ளது.
