Monday, January 26, 2026

இணையத்தில் பட்டைய கிளப்பும் திமுகவின் திராவிடப் பொங்கல் பாடல்.. வரிகள் இதோ..!

சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம் நிறைந்த திராவிடப் பொங்கல் பாடல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த பாடல் வரிகள் மற்றும் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விடியல் வந்து நம்ம கனவெல்லாம் கையில் சேத்ததே

விளைஞ்ச கதிராட்டம் மனசெல்லாம் பொங்கி நிக்குதே

ஆ..ஏ.. ஓ.. இது திராவிடப் பொங்கல்

தெற்க பாத்து திசைய மாத்து வடக்கும் கேட்கும் மனசு பூத்து

பொங்கி பெருகும் தமிழர் வளர்ச்சி தொடர வேண்டும் நடக்கும் ஆட்சி

தமிழர் வாழ்க்கை திருநாளாக சிங்கம் ஒன்னு உறுமுது திமிரா

கிழக்க பாத்து குலவ போட்டு பொங்கல் வைக்க வாரோம்

இது திராவிடப் பொங்கல் ஆ..ஏ.. ஓ.. இது திராவிடப் பொங்கல்

மாட்டுக்கும் தடை போட்டான் ஏட்டுக்கும் அணை போட்டான்

மண்ணோட வரலாற மண் மூடி எடை போட்டான்

தேன் கூட்ட தெரியாம விளையாட்டா சீண்டிட்டான்

தீக்கூட்டம் பணியாது தலைகீழா குனியாது

ஒரு வேங்கை குடை கீழ இனமெல்லாம் உறவாச்சு

வேட்டை வேங்கைய பாத்து ஓடி நரிகள் புதருக்குள் பதுங்கிருச்சு

தரணி கொண்டாடும் தலைவனை பாத்து வீரத் தமிழ்நாடே கொண்டாடும்

இது திராவிட பொங்கல் ஆ..ஏ.. ஓ.. இது திராவிடப் பொங்கல்

தெற்க பாத்து திசைய மாத்து வடக்கும் கேட்கும் மனசு பூத்து

பொங்கி பெருகும் தமிழர் வளர்ச்சி தொடர வேண்டும் நடக்கும் ஆட்சி

Related News

Latest News