நடிகர் பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ திரைப்படம் நேற்று (ஜனவரி 9) உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார், சஞ்சய் தத் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.67 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உலகளவில் ரூ.112 கோடி வசூலித்தாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
