கடலூர் மாவட்டத்தில், தேமுதிகவின் சார்பில் நடைபெற்ற மக்கள் உரிமை மீட்பு 2.0 மாநாட்டில் கூட்ட நெரிசலில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாவடநல்லூர் கிளை செயலாளர் செல்வராஜ் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்
அரியலூர் மாவட்டம் தாவாடநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 35). இவர், நேற்று கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே நடைபெற்ற தே.மு.தி.க. மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துகொண்டார்.
இந்த நிலையில் இரவு 9 மணியளவில் மாநாடு நடை பெற்றுக்கொண்டிருந்த போது செல்வராஜூக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பின்பு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தொண்டர் கட்சி நிர்வாகிகளும் செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் செல்வராஜ் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
