Monday, January 12, 2026

H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு ஆபத்து? விசா ரத்தாகும்? தூதரகம் கடும் எச்சரிக்கை!

அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கும், அல்லது படிக்கச் செல்ல நினைக்கும் இந்திய மாணவர்களுக்கு ஒரு மிக முக்கியமான எச்சரிக்கை! அமெரிக்கத் தூதரகம் (US Embassy) இப்போது ஒரு கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. “எங்கள் நாட்டுச் சட்டங்களை மீறினாலோ, அல்லது கைது செய்யப்பட்டாலோ, உங்கள் விசா உடனடியாக ரத்து செய்யப்படும்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த எச்சரிக்கையைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. மாணவர்கள் மட்டுமல்ல, H-1B மற்றும் H-4 விசா மூலம் வேலைக்குச் செல்பவர்களுக்கும் இது பொருந்தும். “அமெரிக்கச் சட்டங்களை உடைப்பது உங்கள் விசாவுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். அப்படி ஏதாவது நடந்தால், நீங்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவீர்கள் (Deported). அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில் நீங்கள் அமெரிக்காவுக்கு விசா விண்ணப்பிக்கவே தகுதியற்றவர் ஆகிவிடுவீர்கள்” என்று எச்சரித்துள்ளது.

ஏன் இந்தத் திடீர் எச்சரிக்கை? சமீபகாலமாக அமெரிக்காவில் குடியேற்றம் மற்றும் விசா விதிமுறைகள் மிகக் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள் என்ற பெயரில் தங்கிவிட்டு, விசா விதிமுறைகளை மீறுவது அல்லது சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதால், அமெரிக்கா தனது பிடியை இறுக்கியுள்ளது. சின்னதாக ஒரு போலீஸ் கேஸ் ஆனால்கூட, உங்கள் கனவு சிதைந்துபோக வாய்ப்புள்ளது.

எனவே, அமெரிக்காவில் இருக்கும் மாணவர்கள் அங்குள்ள சட்ட திட்டங்களை 100 சதவீதம் மதித்து நடக்க வேண்டும். பார்ட் டைம் வேலை பார்ப்பதாக இருந்தாலும் சரி, பொது இடங்களில் நடந்து கொள்வதாக இருந்தாலும் சரி, விழிப்புடன் இருப்பது அவசியம். ஒருமுறை ‘பிளாக் மார்க்’ விழுந்தால், வாழ்நாள் முழுவதும் அமெரிக்கா பக்கம் தலை வைத்துக்கூடப் படுக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Related News

Latest News