நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சர்ச்சைக்குரிய காட்சிகள் காரணமாக இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,திரைப்பிரபலங்கள் பலரும் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சிலம்பரசன் விஜய்க்கு ஆதரவாக தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “அன்புள்ள விஜய் அண்ணா, பின்னடைவுகள் உங்களை ஒருபோதும் தடுத்ததில்லை. இதைவிடப் பெரிய புயல்களையெல்லாம் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள். இதுவும் கடந்து போகும், ஜனநாயகன் வெளியாகும் நாளில்தான் உண்மையான திருவிழா தொடங்குகிறது” என பதிவிட்டுள்ளார்.
