தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வந்த வேதாந்தா குழுமத்தின் உரிமையாளரின் மகன் உயிரிழந்துள்ளார்.
வேதாந்தா குழுமத்தின் உரிமையாளராக அனில் அகர்வால் உள்ளார். இவரது மூத்த மகன் அக்னிவேஷ் அகர்வால் (49) அமெரிக்காவில் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். நியூ யார்க் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
அக்னிவேஷ் அகர்வால் வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான தல்வண்டி சபோ பவர் லிமிட்டட் நிறுவனத்தின் தலைவராகவும், அக்குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
