பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை சென்னை ஆலந்தூர், நசரத்புரத்தில் உள்ள ரேஷன் கடையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு சார்பில் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களுடன் தலா ரூ.3 ஆயிரம் ரொக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்திற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. பொங்கல் டோக்கன் நேரடியாக உங்கள் வீடுகளில் வழங்கப்படும். ஒருவேளை நீங்கள் வீடுகளில் இல்லையென்றால், பொங்கல் பரிசு டோக்கன் மீண்டும் ரேஷன் கடைக்கே எடுத்து செல்லப்பட்டுவிடும்.
இதனால் பொங்கல் பரிசு வழங்கப்படும் நேரங்களில் ரேஷன் கடைகளில் நேராக விசாரித்தால் உங்கள் டோக்கன் பெற முடியும். டோக்கனில் எந்த நேரத்தில் வரவேண்டும் என்ற தகவல் இருக்கும். அந்த நேரத்தில்.. பொருட்கள் வாங்கலாம். டோக்கன் கிடைத்தவர்கள் அதை காட்டி ரேஷன் கடைகளில் பொருட்கள் மற்றும் பணத்தை வாங்கிக்கொள்ளலாம்.
