இந்தியாவிற்கு 500 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை தண்டிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ஒப்புதலை வழங்கியுள்ளார். இதனால் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் அமெரிக்காவின் நேரடி வரி பாதிப்பிற்கு ஆளாக நேரிடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியா மற்றும் சீனா மீதான அமெரிக்க வரிகள் அடுத்த வார தொடக்கத்தில் 500 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும். குடியரசு கட்சியின் மூத்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம் மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, இந்தத் வரி விதிப்புகளுக்கான மசோதாவிற்கு அதிபர் பச்சைக்கொடி காட்டியுள்ளார். இது குறித்து கிரஹாம் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
