வாகன ஓட்டுநர்கள் மற்றும் நீண்ட தூர பயணிகளுக்கு, ‘டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா’ மிக பிரபலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக, இன்னோவா கிரிஸ்டாவின் விற்பனையை 2027 இல் இருந்து நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டொயோட்டா தற்போது இன்னோவா ஹைகிராஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஹைகிராஸ் சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் அதிக எரிபொருள் திறன் கொண்டது.
கிரிஸ்டா மாடல் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய தொழில்நுட்பம் மற்றும் மாறிவரும் வாடிக்கையாளர் விருப்பத்தேர்வுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
