சென்னை, திருமங்கலம் சத்திய சாய் நகரில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக, குடியிருப்புவாசிகள் ஒன்று சேர்ந்து, ‘ஸ்பீக்கர்’கள் பொருத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மதிவாணன் என்ற நபர், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை தனது வீட்டிற்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து ‘ஸ்பீக்கர்’களை அணைத்தபோது, சிறுமி அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மதிவாணனின் வீட்டினுள் சென்று பார்த்தனர்.
அப்போது, மதிவாணன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. ரத்தவெள்ளத்தில் கிடந்த சிறுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மதிவாணனுக்கு தர்ம அடி கொடுத்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மருத்துவ பரிசோதனை அடிப்படையில் சிறுமை பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்டது உறுதியானதால், இச்சம்பவம் தொடர்பாக, போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மதிவாணனை கைது செய்து நேற்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, மதிவாணன் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது வழுக்கி விழுந்து அவனது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுபோதையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
