நாடு முழுவதும் உள்ள கார் உரிமையாளர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, பயணிகள் கார்களுக்கான Know-Your-Vehicle (KYV) செயல்முறை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய விதி பிப்ரவரி 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது.
KYV என்பது FASTags வாகனப் பதிவு எண்களுடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு சரிபார்ப்பு வழிமுறையாகும். சில லாரி ஓட்டுநர்கள், கார்களுக்கான ஃபாஸ்டேக்கைப் பயன்படுத்தி சுங்கச்சாவடிகளில் குறைவான கட்டணத்தைச் செலுத்தி வந்தனர். இது போன்ற சிக்கல்களைச் சமாளிக்க, ஒரு நாடு தழுவிய பாதுகாப்பை உருவாக்குவது அவசியமானது. இதன் விளைவாகவே KYV அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த சிக்கல்களைக் கவனத்தில் கொண்டு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இப்போது முடிவு செய்து, பிப்ரவரி 1, 2026 முதல் புதிய FASTags-க்கு KYV தேவையில்லை என்று அறிவித்துள்ளது. இந்த விதி கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கு வழங்கப்படும் புதிய FASTags-க்கு மட்டுமே பொருந்தும்.
