Wednesday, January 14, 2026

நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை எப்போது? – ரயில்வே அமைச்சர் தகவல்

நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை அடுத்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் கடனுதவியுடன், மும்பை – அகமதாபாத் இடையே 508 கிலோ மீட்டர் தூரத்துக்கு, அதிவேக புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் வகையில், இந்த ரயில் பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புல்லட் ரயில் திட்டத்துக்கு கடந்த 2017-ஆம் ஆண்டில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், முதல் புல்லட் ரயில் சேவை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி தொடங்கும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

புல்லட் ரயிலுக்கு இப்போதேகூட டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் கூறினார். மேலும் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சேவை இம்மாதத்திலேயே பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பார் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Related News

Latest News