நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா, ஜனவரி 1 முதல் தனது அனைத்து கார் மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விலைமதிப்புள்ள உலோகங்கள் மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்ததையே இதற்கான முக்கிய காரணமாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் வெளியிட்ட அறிக்கையின் படி, மூலப்பொருட்களின் விலை உயர்வின் காரணமாக, அனைத்து மாடல் கார்களுக்கும் சராசரியாக சுமார் 0.6 சதவீதம் விலை உயர்வு அமல்படுத்தப்படுகிறது.
செலவுகளை கட்டுப்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கவும் நிறுவனம் தொடர்ந்து முயற்சி செய்து வந்தாலும், அதிகரித்த சில செலவுகளை சந்தைக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
