Monday, January 26, 2026

‘குக் வித் கோமாளி’ பிரபலம் புகழின் தந்தை காலமானார்..!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி, கலக்கப்போவது யார்’ போன்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் புகழ். சின்னத்திரையை தொடர்ந்து, “எதற்கும் துணிந்தவன், டிஎஸ்பி. அயோத்தி, யானை’ உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில், அவரது தந்தை எம்.எல்.முருகன் இன்று காலமானார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அப்பா என் கிட்ட சொல்லாமா எங்கேயும் போக மாட்டிய தெய்வமே இப்படி சொல்லாம போயிட்டியே” என்று உருக்கமாக பகிர்ந்து இருக்கிறார். இவரது தந்தையின் மறைவுச் செய்தி வெளியானதும், சமூக வலைதளங்களில் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் புகழுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Related News

Latest News