பிரபல கிராமிய பாடகியும் பருத்திவீரன் திரைப்பட பாடகியுமான லட்சுமி அம்மாள்(75) வயது மூப்பு மற்றும் உடலநலக்குறைவுக் காரணமாக செவ்வாய் இரவு காலமானார்.
கடந்த 2007 இல் திரைப்பட இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவான நடிகர் கார்த்தி நடித்த பருத்திவீரன் திரைப்படத்தில் “ஊரோரம் புளிமரம், டங்கா டுங்கா” ஆகிய பிரபலமான நாட்டுப்புறப் பாடல்களை பாடியும் திரையில் தோன்றியும் ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்தார்.
2016ம் ஆண்டு அவருக்கு ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய் இரவு லட்சுமி அம்மாள் காலமானார்.
இவரது மறைவுக்கு திரையுலகினரும், நாட்டுப்புறக் கலைஞர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
