உலகம் முழுவதும் நாளை 2026 ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :
- கடற்கரை உட்புற சாலை 31.12.2025 அன்று 19.00 மணி முதல் 01.01.2026 அன்று 06.00 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். கடற்கரை உட்புற சாலையில் 19.00 மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது. மேலும் அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படும்.
- காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை 31.12.2025 20.00 மணி முதல் 01.01.2026 06.00 மணி வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்படும்.
- அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை, தெற்கு கால்வாய் சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு மந்தவெளி, ஆர்.ஏ.புரம் 2வது மெயின் ரோடு, ஆர்.கே மட் ரோடு, லஸ் மயிலாப்பூர் வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
- டாக்டர் ஆர்.கே.சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்பட்டு ஆர்.கே. மட் சாலை, லஸ் சந்திப்பு, மந்தவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் ஹை ரோடு மற்றும் கிரீன்வேஸ் சாலையை சென்றடையலாம்.
- பாரிஸ் சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (வடக்கு) வடக்கு கோட்டை சுவர் சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், வாலாஜா பாய்ண்ட், அண்ணாசாலை வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
- வாலாஜா சந்திப்பிலிருந்து காமராஜர் சாலையை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. சுவாமி சிவானந்தா சாலை, (தூர்தர்ஷன் கேந்திரா அருகில்) வாலாஜா சாலை (விக்டோரியா விடுதி சாலை அருகில்) பாரதி சாலை மற்றும் விக்டோரியா விடுதி சாலை, டாக்டர் பெசன்ட் சாலை (எம்ஆர்டிஎஸ் அருகில்), லாயிட்ஸ் சாலை நடேசன் சாலை மற்றும் டாக்டர் ஆர்.கே.சாலை சந்திப்பு வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.
- தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் சந்திப்பு வரையிலான முழு சாலையிலும் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.
- கொடி மரச் சாலையில், இரவு 20.00 மணி முதல் வாலாஜா பாயிண்டிலிருந்து போர் நினைவுச்சின்னம் நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
- கிரீன்வேஸ் பாயிண்டிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் மாநகர பேருந்துகள் ஆர் கே மட் சாலையில் உள்ள “U” திருப்பத்தில் திரும்பி, திருவேங்கடம் தெரு, தேவநாதன் தெரு, ஆர்கே மடம் சாலை, வெங்கடேஸ்வர அக்ரஹாரம் தெரு (சாய்பாபா கோயில்), நாகேஸ்வர பூங்கா வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
- வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் அனைத்து மாநகர பேருந்துகளும் ஆ.ர்.பி.ஐ சுரங்கபாதை வடபகுதிக்கு திருப்பிவிடப்பட்டு, முத்துச்சாமி சாலை, அண்ணாசாலை, அண்ணா ரோட்டரி, கத்தீட்ரல் ரோடு, வி.எம். சாலை, லஸ் சந்திப்பு மந்தவெளி சந்திப்பு வழியாக வாலாஜா சந்திப்பை அடைவதற்கு தெற்கு கால்வாய் சாலையை சென்றடைந்து தங்கள் இலக்கை அடையலாம்.
- அனைத்து மேம்பாலங்களும் 31.12.2025 அன்று 22.00 மணி முதல் 01.01.2026 அன்று 06.00 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
