Monday, December 29, 2025

தெருநாய் கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள்., அரசின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு

தெருநாய்களை கணக்கெடுக்கும் பணிக்கு அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து பள்ளி ஆசிரியர்களையும் பயன்படுத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி அரசின் இந்த உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. விலங்கு நல ஆர்வலர்கள், மற்றும் விலங்குகள் நலன் துறையைச் சார்ந்தவர்களுக்கு இந்தப் பணியை ஒதுக்காமல் தங்களுக்கு ஒதுக்குவது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் தெருநாய் கணக்கெடுப்புக்கு ஆசிரியர்களை நியமிக்கும் இதே போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Related News

Latest News