திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மாட்டுப்பட்டி கிராமத்தில் மனோராம் என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை தனது வீட்டில் அருகே உள்ள சாலையில் நிறுத்தி வைத்து சென்றுள்ளார்.
மீண்டும் நாங்கள் தன்னுடைய இருசக்கர வாகனத்தை பார்க்கும் போது நிறுத்தி வைத்திருந்த இடத்தில் இருசக்கர வாகனம் இல்லாத நிலையில் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கம் விசாரித்த விசாரித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஒரு வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்க்கும் போது மர்ம நபர் ஒருவர் மனோராம் இருசக்கர வாகனத்தை கள்ளச்சாவி பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து, கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிகமாக இரு சக்கர வாகனங்கள் திருடு போவது அப்பகுதி மக்களின் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
