எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ஜனநாயகன்’. இந்த படம் 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று திரைக்கு வர உள்ளது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், எப்போதும் கேரளத்தில் முதல்காட்சி அதிகாலை 4 மணிக்குத் துவங்கும். ஆனால், இம்முறை தயாரிப்பு தரப்பிலிருந்து அதற்கு ஒப்புதல் அளிக்காததால் முதல் நாளின் முதல் காட்சி காலை 6 மணிக்கே துவங்கும் என இப்படத்தின் கேளர விநியோகிஸ்தர் அறிவித்துள்ளார்.
