2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள சூழலில், தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த பரபரப்பான சூழலில் சேலத்தில் தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் தலைவராக ராமதாஸ், கௌரவத் தலைவராக ஜி.கே.மணி, செயல் தலைவராக ஸ்ரீகாந்தி, பொதுச் செயலாளராக முரளி சங்கர் ஆகியோரை அங்கீகரித்து பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து சௌமியா அன்புமணியை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
