Monday, December 29, 2025

இனிமே இதையெல்லாம் ‘டீ’ ன்னு சொல்லக்கூடாது., வெளியான புது உத்தரவு

“டீ” என்ற வார்த்தையை எந்த பொருட்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேபோல், எந்த பொருட்களை “டீ” என்று அழைக்க முடியாது என்பதற்கான விளக்கத்தையும் அந்த ஆணையம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தேயிலை (Tea leaves) பயன்படுத்தப்படாத சில பொருட்களை சில நிறுவனங்கள் “தேநீர்” என்ற பெயரில் விற்பனை செய்து வருவது கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், கிரீன் டீ, இன்ஸ்டன்ட் டீ போன்ற பொருட்களில் தேயிலை சேர்க்கப்பட்டிருப்பதால் அவற்றை “தேநீர்” என்று குறிப்பிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஹெர்பல் டீ, ரூயிபோஸ் டீ போன்ற பெயர்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் தேயிலை சேர்க்கப்படாததால், அவற்றை “தேநீர்” என்று அழைக்கக்கூடாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்று தவறாக பெயரிடுவது நுகர்வோருக்கு தவறான தகவலை வழங்கும் செயல் என்று உணவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் ஆன்லைன் விற்பனையாளர்கள், தாங்கள் விற்பனை செய்யும் பொருளில் தேயிலை இல்லை என்றால் அதன் லேபிளில் “தேநீர்” என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related News

Latest News