சென்னை, போரூர் ஆர்.ஈ நகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (40). கார் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இவரது மனைவி ரோசி. இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றம் மகள் உள்ளனர். இந்நிலையில், மனைவியின் நடத்தை மீது சத்தியராஜூக்கு சந்தேகம் வந்துள்ளது.
கடந்த 24ம் தேதி, மது அருந்தி விட்டு வந்த சத்யா, மனைவியை போட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். தலையை முடியை கொத்தாக பிடித்து சுவற்றில் பலமுறை மோதி அடித்திருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த ரோசி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சற்று நேரத்தில் போதை தெளிந்ததும் தான், மனைவியை கொன்று விட்டதே அவருக்கு தெரியவந்துள்ளது. உடனே அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார்.
தகவல் அறிந்து வந்த போரூர் போலீஸார் ரோசியின் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த சத்யாவை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
