Monday, December 29, 2025

சிறுநீரகத்தொற்று காரணமாக நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்தநிலையில் சனிக்கிழமை அவர் மீண்டும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகத்தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News