தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவலின்படி, ஜனவரி 1 முதல் பிப்ரவரி தொடக்கம் வரை சென்னை எழும்பூர், தாம்பரம், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, மும்பை, டெல்லி, புவனேஸ்வர், புதுச்சேரி உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூர் நிலையத்தில் ஒவ்வொரு பயணத்திலும் 1 நிமிடம் நின்று செல்லும்.
இந்த தற்காலிக நிறுத்த பட்டியலில் வைகை, பாண்டியன், திருக்குறள், சம்பார்க் கிராந்தி, காசி தமிழ், உழவன், சிலம்பு, அந்தியோதயா, ஹம்சபர், அனுவ்ரத் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர்ஃபாஸ்ட் ரயில்கள் இடம்பெற்றுள்ளன. சில நீண்ட தூர ரயில்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் வட மாநிலங்களில் இருந்து நேரடியாக மேல்மருவத்தூரை அடைய பக்தர்களுக்கு நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக மும்பை, டெல்லி, ஜோத்பூர் போன்ற தொலைதூர நகரங்களிலிருந்து வரும் ரயில்களும் இந்த தற்காலிக நிறுத்தத்தில் அடங்கும்.
