Sunday, December 28, 2025

எந்த பொறுப்பிலும் இல்லாத ஒருவர் எப்படி என்னை கட்சியில் இருந்து நீக்க முடியும்? – ஜி.கே.மணி

சேலத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நாளை ( டிச.29) நடைபெறும் பாமக செயற்குழு கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை மருத்துவர் ராமதாஸ் வெளியிடுவார் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

அன்புமணியின் சூழ்ச்சியால் நிலைகுலைந்து போயுள்ளார் ராமதாஸ். கட்சியை அன்புமணி சீரழித்துவிட்டதாக என்னிடம் பலரும் கூறுகின்றனர். என்னை பாமகவில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. ராமதாசால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டவர் அன்புமணி. எந்த பொறுப்பிலும் இல்லாத ஒருவர் எப்படி என்னை கட்சியில் இருந்து நீக்க முடியும்?

அன்புமணி பின்னால் விவரம் அறியாமல் சென்ற நிர்வாகிகள் மீண்டும் திரும்பி வருவார்கள். ராமதாஸ் தலைமையில் பாமக அமைக்கும் கூட்டணி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும்.

தமிழ்நாட்டில் வலிமையான அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருந்த பாமக, அங்கீகாரமில்லாத கட்சியாக மாறிவிட்டது. இந்த நிலையில்தான், மீண்டும் அங்கீகாரமுள்ள கட்சியாக வளர்த்தெடுப்பேன் என்று புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்துள்ளார் என கூறியுள்ளார்.

Related News

Latest News