உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாத்கலா பயிற்சி மைதானத்தில், சனிக்கிழமை மாலை வழக்கமான துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெற்று வந்தது. அந்த நேரத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
காயமடைந்த ராணுவ வீரர்கள் சுரேஷ் (45), பவித்ரா (35), தீபக் (27) மற்றும் பிரவீன் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் தீபக் மற்றும் சுரேஷ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வெடி விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
