தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உறவினருக்கு துணையாக, மருத்துவமனையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை, அந்த வார்டுக்கு வந்த ராமகிருஷ்ணன் (32) என்ற நபர், தூங்கிக் கொண்டிருந்த அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரைப் பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ராமகிருஷ்ணனை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
