Sunday, December 28, 2025

திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் நாணயங்கள் அடங்கிய புதையல்

திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில், பண்டைய கால ஒற்றுமையில் 86 பொன்னிற நாணயங்கள் அடங்கிய புதையல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்து உண்மை தன்மை கண்டறிந்து வருவதாக வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்தலி அடுத்த சுந்தரம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆதவன். இவர் தனது நிலத்தை பொக்லைன் கொண்டு சமன் செய்த போது, புதையுண்டு கிடந்த இரும்பு குடுவை என்று கண்டெடுக்கப்பட்டது.

அதில், பண்டைய கால ஒற்றுமையில் 86 பொன்னிற நாணயங்கள் அடங்கிய புதையல் இருந்துள்ளது. தகவல் அறிந்த திருப்பத்தூர் தாசில்தார் நவநீதம் மற்றும் வருவாய்த் துறையினர், ஆதவனிடம் இருந்த தங்க நாணயத்தை மீட்டனர். தொடர்ந்து, தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்து உண்மை தன்மை கண்டறிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News