புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு காவல் துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், விடுதிகளுக்கு வரும் வாகனங்களை முறையாக சோதனையிட்டு பதிவு செய்ய வேண்டும் எனவும், அனைத்து நுழைவு வாயில்களிலும் கண்காணிப்பு கேமரா கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீச்சல் குளத்தின் மீதோ, அருகிலோ கொண்டாட்ட மேடை அமைக்கக் கூடாது எனவும், உணவு மற்றும் மதுபான சேவையை அதிகாலை 1 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
