இதுவரை தங்கள் ஆதார் எண்ணை நிரந்தர கணக்கு எண்ணுடன் (PAN) இணைக்காத வரி செலுத்துவோருக்கு, அதைச் செய்ய மிகக் குறைந்த நேரமே உள்ளது. பான்-ஆதார் இணைப்பை நிறைவு செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2025 ஆகும். சரியான நேரத்தில் இரண்டையும் இணைக்கவில்லை என்றால், வரி மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் பெரிய சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
காலக்கெடுவைத் தவறவிட்டால், ஜனவரி 1, 2026 முதல் பான் செயலிழந்துவிடும். இது தினசரி நிதி மற்றும் வரி தொடர்பான பணிகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
பான் மற்றும் ஆதாரை இணைக்கவில்லையென்றால் என்னாகும்?
TDS அல்லது TCS பிடித்தம், 15G அல்லது 15H போன்ற படிவங்கள் நிராகரிக்கப்படலாம். அத்துடன், KYC சிக்கல்கள் காரணமாக வங்கிகள், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் தரகு சேவைகள் நிறுத்தப்படலாம். இது தவிர, ரீஃபண்ட் தொகையும் வழங்கப்படாமல் போகலாம்.
