திரிபுரா மாநில சட்டமன்ற சபாநாயகர் பிஸ்வா பந்து சென்(வயது 72), கடுமையான மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் வடக்கு திரிபுராவில் உள்ள தர்மநகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தார்.
