Friday, December 26, 2025

அதிகாலை 4.30 மணிக்கு நிலநடுக்கம்., பதறியபடி எழுந்த மக்கள்

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பதறியடித்துக் கொண்டு வீதிகளுக்கு ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News