பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக ரூ.225 மதிப்புள்ள ஒரு சிறப்பு திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால் வசதி வழங்கப்படுகிறது. மேலும், கிறிஸ்துமஸ் சலுகையாக தினமும் 3GB டேட்டா வழங்கப்படுகிறது.
இதற்கு முன்பு இந்த திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதல் டேட்டா சேர்க்கப்பட்டுள்ளது. இதுடன், நாளுக்கு 100 எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இது ஒரு குறுகிய கால சலுகை திட்டமாகும். இந்த நன்மைகளை டிசம்பர் 24 முதல் ஜனவரி 31 வரை மட்டுமே பெற முடியும்.
அதேபோல், பிஎஸ்என்எல் ரூ.251 மதிப்புள்ள மற்றொரு கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொய்ஸ் காலிங் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இதில் மொத்தமாக 100GB டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதுவும் ஒரு லிமிடெட் வேலிடிட்டி திட்டம் தான். முன்னதாக இந்த திட்டம் குழந்தைகள் ஸ்பெஷல் திட்டமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த திட்டத்தின் நன்மைகளை அனைத்து வாடிக்கையாளர்களும் பெறலாம். இந்த திட்டத்தின் சலுகைகள் டிசம்பர் 24 முதல் ஜனவரி 31, 2026 வரை மட்டுமே செல்லுபடியாகும்.
