தூத்துக்குடி மத்திய மாவட்ட பொறுப்பாளராக இரண்டு ஆண்டுகளாக பணியாற்றிய அஜிதா ஆக்னலுக்கு பொறுப்பு வழங்காமல், சாமுவேல் என்பவரிடம் பணம் பெற்றுக்கொண்டு புஸ்ஸி ஆனந்த் பொறுப்பு வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, நீலாங்கரையில் இருந்து பனையூர் அலுவலகத்திற்கு காரில் வந்த விஜயை தடுக்க முயன்றார். ஆனால் காரை நிறுத்தாமல் மெதுவாக மோதியபடி சென்றது. பின்னர், அஜிதா பனையூரில் உள்ள தவெக அலுவலகம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் அஜிதா, அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடல்நிலை மோசமானால் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
