33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று (புதன்கிழமை) தொடங்கி ஜனவரி 18-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரின் போட்டிகள் அகமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
இன்று நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் ஒடிசா மற்றும் சவுராஸ்டிரா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஒடிசா அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 345 ரன்கள் குவித்தது.
ஒடிசா அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த ஸ்வஸ்திக் சமல் அதிரடியாக 212 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணையாக சாமந்த்ரே 100 ரன்கள் விளாசினார். விஜய் ஹசாரே தொடரில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ஸ்வஸ்திக் சமல் படைத்தார்.
இத்தகைய சிறப்பான சாதனைகள் இருந்தபோதிலும், ஸ்வஸ்திக் சமல் ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
